கல்யாணத்திற்கு முன்னால் சப்பாத்தி போலிருக்கும் நடிகைகள் பலர் ஆஃப்டர் மேரேஜ்
எண்ணையில்
மிதக்கும் பூரி போலாகி அலறவும் மிரளவும் வைப்பார்கள் ரசிகர்களை. ஆனால்
'நேத்து பூத்த ரோஜா' போலவே இருக்கிற பக்குவம் சினேகாவுக்கு மட்டுமே வாய்த்த
வரம். ஹரிதாஸ் படத்தின் நாயகியும் இவர்தான். இந்த பிரஸ்மீட்டுக்கு
வந்திருந்த சினேகா, மனம் விட்டு பேசினார் என்பதைவிட மனம் விட்டு
புலம்பினார் என்பதே சாலப்பொருத்தம்.

'இந்த படத்தில் நடிக்கணும்னு என்னை
அழைச்சப்போ நான் தயங்கினேன். எனக்கு கல்யாணம் ஆகப்போகுது சார்னு சொன்னேன்.
அதுக்கென்ன... பரவாயில்ல. நீங்கதான் நடிக்கணும்னு சொன்னார் டைரக்டர்
குமரவேலன். அதுவே எனக்கு ஆச்சர்யமா இருந்திச்சு. ஏன்னா ஒரு நடிகைக்கு
கல்யாணம் ஆகிட்டா அப்புறம் அவங்களுக்குன்னு சில கேரக்டர்கள் வச்சுருப்பாங்க
இங்க. மறுபடியும் ஹீரோயினா நடிக்கவே விட மாட்டாங்க. ஆனால்
அதுபற்றியெல்லாம் அவர் நினைக்கவே இல்லை' என்றார்.
ஆர்ட் பிலிமுக்குரிய கதையை கமர்ஷியல்
பிலிமாக்கியிருக்கிறாராம் இப்படத்தின் டைரக்டர் ஜிஎன்ஆர் குமரவேலன்.
பாலுமகேந்திரா சார் கூட இந்த படத்தில் வரும் கானா பாடல் அவசியமான்னு
கேட்டார். என்டர்டெயின்மென்ட் பாடல் வேணும் என்பதற்காகதான் அப்படி ஒண்ணு
என்றார். இந்த கானாவில் சொல்லியிருக்கும் கருத்துகள் போலீஸ் தேசத்தில்
புன்னகையை வரவழைக்கும். ஆமாம்... இது போலீசுக்கு ஆதரவான பாடல்.
சங்கம் வைப்பதன் தேவையையும் இப்பாடலில்
சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். போலீசுக்கு சங்கம் தேவையா, இல்லையா என்பதே
பெரிய பஞ்சாயத்தாக இருக்கும் இந்த நேரத்தில், இந்த பாடலை கேட்ட சில போலீஸ்
அதிகாரிகள், பாடலை வெட்டிடாதீங்க இருக்கட்டுமே என்றார்களாம்.
ஏழரையை எட்டரையாக்குறதும், எட்டரைய சைபராக்குறதும் போலீஸ்தான்கிறதால பிரச்சனையை அவங்ககிட்டயே விட்ருங்க பிரதர்.
Labels:
Cinema news
0 comments:
Post a Comment